நாளை பிரியங்கா காந்தி வயநாட்டிற்கு வரவிருக்கிறார். கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில், அவர் நாளை முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்கிடையில், அவர் காங்கிரஸ் தேர்தல் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைகளை நடத்தவுள்ளார். அவர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பூத் மற்றும் தொகுதி கமிட்டி பொறுப்பாளர்களுடன் சந்தித்து உரையாட திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் படி, நாளை பிப்ரவரி 8ம் தேதி காலை 9.30 மணிக்கு மானந்தவாடியில், பிற்பகல் 12 மணிக்கு சுல்தான் பத்தேரியில் மற்றும் பிற்பகல் 2 மணிக்கு கல்பெட்டாவில் நடைபெறும் கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது, அடிக்கடி ஊருக்குள் நுழையும் வனவிலங்குகளால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்திகளை சமாளிப்பது போன்ற பல்வேறு சிக்கல்களைப் பற்றிய ஆலோசனைகளை அவர் நடத்துகிறார்.

