ஐபில் 2024 தொடருக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ல் நடைபெறுகிறது; 333 வீரர்கள் பட்டியல் வெளியீடு

அரபு நாடுகள் இந்தியா உலகம் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளையாட்டு

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19 மதியம் 2.30 மணியளவில் தொடங்கவுள்ளது. துபாயின் கோகோ கோலா சதுக்கத்தில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இவர்களில் 214 பேர் இந்தியாவையும், 119 பேர் வெளிநாடுகளையும் சேர்ந்தவர்கள். ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காக மொத்தம் 1,116 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் தகுதியின் அடிப்படையில் 333 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளார்கள். அதிகபட்சமாக டிசம்பர் 19 நடைபெறும் ஏலத்தில் 77 வீரர்கள் வரை அணிகளில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த 77 பேரில் வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் அதிகபட்சமாக 30 பேர் இருப்பார்கள். மொத்தம் ரூ. 262.95 கோடிக்கு ஏலம் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *