மத்திய பட்ஜெட் 2025 தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.

அரசியல் இந்திய வணிகம் இந்தியா சிறப்பு செய்திகள் பொருளாதாரம்

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டின் சிறப்பம்சமாக ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை உள்ளவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ரூ.12 லட்சத்திற்கும் மேலான வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.4 லட்சம் முதல் வரி கணக்கீடு செய்யப்படும். 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு வழங்கப்படும் என தெரிவித்தார். புதிய வரி முறையின் கீழ் ரூ.12 லட்சம் வருமானம் வரை (மூலதன ஆதாயங்களை தவிர) மாதத்திற்கு ரூ.1 லட்சம் சராசரி வருமானம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் நடுத்தர வர்க்கத்தினரின் வரி செலுத்தும் அளவு குறைவாக இருக்கும், இதன் மூலம் அவர்களின் கைகளில் அதிக பணம் இருக்கும். இது அவர்களின் வீட்டுச் செலவுகளை, சேமிப்புகளை மற்றும் முதலீடுகளை அதிகரிக்க உதவும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனால் நடுத்தர வர்க்கத்தினரின் வரி செலுத்தும் அளவு குறைவாக இருக்கும், இதன் மூலம் அவர்களின் கைகளில் அதிக பணம் இருக்கும். இது அவர்களின் வீட்டுச் செலவுகளை, சேமிப்புகளை மற்றும் முதலீடுகளை அதிகரிக்க உதவும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேலும் மத்திய பட்ஜெட்டில் உள்ள மற்ற நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான தகவல்கள்: ஆன்லைன் தொழில்நுட்பம் சார்ந்த ஊழியர்களுக்கான புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. ஏ ஐ தொழில்நுட்பத்தை விவசாயம் மற்றும் பிற துறைகளில் பயன்படுத்துவதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் வேளாண் உள்ளிட்ட மூன்று முக்கிய துறைகளில் AI மையங்கள் நிறுவப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக 1.5 லட்சம் கோடி ரூபாய் மற்றும் மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும். குடிநீர் குழாய்கள் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் 100% இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டத்தை 2028ம் ஆண்டு வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாரத் நெட் திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து அரசு உயர்நிலை பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கப்படும். முதன்முறையாக, பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டி தொழில்முனைவோர்களுக்கான 5 லட்சம் பேருக்கு ரூ.2 கோடி கடன் திட்டம் அறிமுகமாகிறது. 120 புதிய இடங்களுக்கு உள்ளூர் விமான இணைப்புகளை மேம்படுத்த UDAAN திட்டம் புதிதாக தொடங்கப்படும்; அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி கூடுதல் பயணிகளை உருவாக்கும் நோக்கத்தில் செயல்படும். பீகாரில் உள்ள ஐஐடி பாட்னா விரிவாக்கம் செய்யப்படும் என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *