காசிக்கு செல்லக்கூடிய இந்த இலவச பயணத்தில் உணவு இருப்பிடம் போலீஸ் பாதுகாப்புடன் 8 நாட்கள் உபசரிப்பு நடக்கும். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி உள்ளிட்ட கோவில்கள் சுத்தி காண்பிக்கப்படும்.
வாழ்க்கையில் ஒரு முறை காசிக்கு சென்று வந்தால் பெரும் புண்ணியம் என்பது ஐதீகம். அங்கு செல்ல ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் தமிழ்நாட்டில் இருந்து அழைத்துச் செல்லப்படுகிறது. உணவு இருப்பிடம் போலீஸ் பாதுகாப்புடன் 8 நாட்கள் உபசரிப்பு நடக்கும். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி உள்ளிட்ட கோவில்கள் சுத்தி காண்பிக்கப்படும். பின்னர் பத்திரமாக தமிழ்நாட்டில் பக்தர்கள் இறக்கிவிடப்படுவார்கள். காசி தமிழ் சங்கமம் மூலமாக தமிழ் பாரம்பரியத்தை உலகறிய செய்ய இந்த இலவச பயணம் கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்படுத்து வருகிறது. இதில் பதிவு செய்வதற்கு ஆன்லைனில் மட்டுமே முடியும். சரி இந்த இலவச பயணம் குறித்து முழுமையாக பார்க்கலாம்.
காசி ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிப்பவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது சான்று இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம் 2,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். வட்டாட்சியரிடமிருந்து வருமானச்சான்று பெற்று இணைக்கப்பட வேண்டும். காசி ஆன்மிகப் பயணம் சென்று வரும் அளவிற்கு விண்ணப்பதாரர்களுக்கு போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவர்களின் (Civil Surgeon) சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் தற்போது வசிக்கும் வீட்டின் நிலையான முகவரிக்கான ஆதாரம் இணைக்க வேண்டும். ஆதார்கார்டு அல்லது நிரந்தரக் கணக்கு எண் (PAN Card) நகல் இணைக்கப்பட வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறையின் ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திற்கும், தலா 30 விண்ணப்பதாரர்கள் வீதம். 20 இணை ஆணையர் மண்டலத்திலிருந்து 600 விண்ணப்பதாரர்கள் மட்டும் மண்டல இணை ஆணையரின் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்படுவர். மண்டல இணை ஆணையரின் முடிவே இறுதியானது. வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் 600-க்கு மேல் இருப்பின் குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் 600 விண்ணப்பதார்களையும், ஒரே பயணமாக அல்லாமல் 10 பயணங்களாக பிரித்து அழைத்துச் செல்ல நேரிடும் போதும், ஒவ்வொரு பயணத்திற்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவர்.
விண்ணப்ப படிவங்களை தமது முகவரி அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இந்து சமய அநிலையத்துறை இணைய தளத்திலிருந்து www.hrce.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.

