MDH மசாலா பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லி இருப்பதாக அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்ட Everest மீன் குழம்பு மசாலாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு பூச்சிக்கொல்லி வேதிப்பொருள் இருந்ததாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது சர்ச்சை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இந்தியாவில் மசாலா பொருட்களின் மாதிரியை சேகரிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள் MDHன் மசாலா பொருட்களிலும் வேதிப்பொருள் கண்டறியப்பட்டுள்ளதாக அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. எத்திலீன் ஆக்சைடு என்ற புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லை கலவை இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஹாங்காங் தன்னுடைய எல்லைகளுக்குள் குறித்த மசாலா பொருட்களின் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.
மேலும் சிங்கப்பூரில் இறக்குமதியாளர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை திரும்பப் பெறுமாறும், பயன்படுத்திய நுகர்வோர் மருத்துவ ஆலோசனையை பெறுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், குறித்த மசாலா பொருட்களின் தர சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.