எழுத்தாளர் தேவிபாரதியின் ’நீர்வழிப் படூஉம்’ நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மொழிகளில் வெளியாகியுள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளை பெருமைப்படுத்தும் விதமாக 1954 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதில், எழுத்தாளர் தேவி பாரதியின் ’நீர்வழிப் படூஉம்’ நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் இருந்து வருகிறார் தேவி பாரதி. ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்த தேவிபாரதியின் இயற்பெயர் ராஜசேகரன். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளால் வாசகர்களை ஈர்த்துள்ளார். இவரது நிழலின் தனிமை என்னும் நாவல் அவருடைய தலைசிறந்த ஆக்கமாக கொள்ளப்படுகிறது.
ஆரம்பப்பள்ளி ஆசிரியராக 2006 ஜூன் வரை பணியாற்றிய இவர், தனது வேலையை உதறி தள்ளிவிட்டு எழுத்துலகிற்கு பல அற்புத படைப்புகளை அள்ளிக் கொடுத்து கொண்டிருக்கிறார்.
எளியவர்களின் வாழ்வியலை எளிமையாக எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் தேவி பாரதியின் ’நீர்வழிப் படூஉம்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நட்ராஜ் மகராஜ், நொய்யல், பலி, பிறகொரு இரவு, கண் விழுத்த மறுநாள், மூன்றாவது விலா எலும்பும் விழுதுகற்ற ஆல மரமும் போன்றவை கவனிக்கப்பட்ட படைப்புகள் ஆகும்.
இந்த விருது 2024 ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் சாகித்ய அகடாமி விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதையடுத்து, தேவி பாரதிக்கு வாசகர் வட்டங்கள் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

