மேயர் பிரியா கார் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தனது காரில் இன்று மாலை சென்றுகொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மேயர் பிரியா சென்ற காரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மேயர் பிரியா காயம் இன்றி உயிர் தப்பினார். மேம்பாலத்தில் இருந்து இறங்கும்போது திடீரென மேற்பிரியாவின் கார் ஓட்டுநர் பிரேக் பிடித்ததால் பின்னே வந்த லாரி இடித்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி அங்கு வந்த போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இந்த நெடுஞ்சாலையில் விளக்கு வசதி இல்லாததே விபத்துக்கு காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணை தெரியவந்துள்ளது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலையில் மின்விளக்குகள் எரிவதில்லை என அப்பகுதி வாசிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

