பாராளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு முடிவு; தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளரை சந்தித்தனர். அப்போது தேர்தல் ஒப்பந்தத்தில் இருவரும் பரஸ்பரம் கையெழுத்திட்டனர். இதையடுத்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி திருவள்ளூர்(தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *