தூர்தர்ஷன் லோகோ நிறம் மாற்றத்திற்கு எழுந்த கண்டனங்கள்; தூர்தர்ஷன் தரப்பில் விளக்கம்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சின்னத்திரை செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தூர்தர்ஷன் சேனலின் லோகோ நிறம் மாற்றப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், தூர்தர்ஷன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சமீபத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனை தொடர்ச்சியாக தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்சர்சனின் இலச்சினை காலங்காலமாக இருந்து வந்த சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாற்றப்பட்டது குறித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் டிடி செய்திகள் ஏப். 21 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல அரசியல் கட்சிகள் இதற்கு தங்களது வன்மையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இதற்கு தூர்சர்ஷன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அலுவலர் கெளரவ் திவேதி பேசுகையில், “தூர்தர்ஷனின் லோகோவின் நிறத்தை பாஜகவுடன் தொடர்புபடுத்தி பேசுவது தவறானது. தூர்சர்சனின் இலச்சியினையின் வண்ணம் காவியல்ல, ஆரஞ்ச் வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.” என்று விளக்கமளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *