வியட்நாம் நாட்டை தாக்கிய யாகி புயல்; பேரழிவை ஏற்படுத்தி 14பேரை பலிவாங்கிய இயற்கை சீற்றம்

உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வானிலை

வடமேற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய யாகி புயல், நேற்று வியட்நாமை தாக்கியது. வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங்க் ஆகிய பகுதிகளில் மணிக்கு 149 கிமீ வேகத்துடன் புயல் கரை கடந்தது. இதன் காரணமாக பலத்த காற்றுடன் பல மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.பலத்த காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல மின்கம்பங்கள் சாய்ந்ததால் சுமார் 30 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. சுமார் 116,192 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு நன்கு வளர்ந்திருந்த நெல் மற்றும் பழப்பயிர்கள் சேதமடைந்தன. புயல் காரணமாக 4 விமான நிலையங்கள் மூடப்பட்டு நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.புயல், மழை தொடர்பான விபத்துகளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 176 பேர் காயமடைந்துள்ளனர். வியட்நாமை தாக்கிய யாகி சூறாவளி புயல், படிப்படியாக வலுவிழந்து இன்று காலையில் வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *