இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் பெற்று புதிய சாதனை.

இந்தியா சிறப்பு விளையாட்டு

ஒலிம்பிக் தொடரின் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்று அசத்தல்.ஒலிம்பிக் தொடரின் ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து ஸ்பெய்ன் அணி களமிறங்கியது.

இந்திய அணியின் நட்சத்திர கோல்கீப்பர் ஸ்ரீ ஜேஷின் கடைசி போட்டி என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆட்டம் தொங்கிய நிலையில் ஸ்பெய்ன் அணி வீரர்கள் மற்றும் இந்திய அணி வீரர்கள் இருவரும் தீவிரமான ஆட்டத்தை மேற்கொண்டனர்.

ஆனால் இரு அணிகளும் முதல் பாதி வரை கோல் எதுவும் அடிக்கவில்லை. 2வது பாதியில் இந்திய அணி செய்த தவறு காரணமாக ஸ்பெய்ன் அணிக்கு பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி ஸ்பெய்ன் அணியின் கேப்டன் மார்க் மிரால்ஸ் முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் ஸ்பெய்ன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

கடைசி 10 நிமிடங்களில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக விளையாடினர். அதிகளவிலான லாங் பாஸ் தொடர்ந்து செய்யப்பட்டது. சரியாக 90 வினாடிகள் இருந்த போது, ஸ்பெய்ன் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
அதனை இந்திய அணி டிஃபெண்ட் செய்ய வேண்டும்.

அதனை இந்திய கோல்கீப்பர் ஸ்ரீ ஜேஷ் அசராமல் நின்று தடுத்து நிறுத்தினார். அதனை ஸ்பெய்ன் அணி ரிவ்யூ செய்தும் பயன் அளிக்கவில்லை.கடைசி நேரத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்த போதும், ஸ்பெய்ன் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

இதன் மூலமாக இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

இந்த வெற்றியின் காரணமாக, தொடர்ந்து 2 ஒலிம்பிக் பதக்கம் வென்ற பெருமையும் இந்திய ஹாக்கி அணிக்கு கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *