ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024 முதன்மை செய்தி

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்த ஆட்சிக் காலத்துக்குள் அமல்படுத்துவதில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதனை உறுதிப்படுத்தும் வகையில் பேசி இருதார். இந்த திட்டதிற்கான குழு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் 2024 போது அமைக்கப்பட்டு இருந்தது. இந்த குழு, நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பதிவு செய்து ஆராய்ந்து வந்தது. இந்நிலையில் இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான திட்டம் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் முன்னாள் குடியருத்தலைவர் ராம் நாத் கோவிந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கான அறிக்கையை சமர்ப்பித்தார் . அத்திட்டத்தினை மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளிவந்துள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்களில் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார். முதலில், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்கள் நடைபெறும். பின்னர், உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறும் என்றார். முதற்கட்ட தேர்தல் முடிந்த 100 நாட்களுக்கு பிறகு நடைபெறும் என கூறினார்.இந்த திட்டம் தேர்தல் செயல்முறைகளை எளிதாக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது எனவும். இதன் மூலம், தேர்தல் காலத்தில் ஏற்படும் குழப்பங்களை குறைக்கவும், மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கிடையேயான தொடர்புகளை மேம்படுத்தவும் முயற்சிக்கப்படுகிறது. இதனால், இந்தியாவின் தேர்தல் முறை மேலும் சீராகவும், திறமையாகவும் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறினார். மேலும், இது மசோதாவாக நாடாளுமன்றத்தில் வரும் குளிர்கால கூட்டத்தொடர் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த திட்டமானது குறிப்பாக மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தின் 100 ஆம் நாள் நிறைவு கொண்டாட்டமாக ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *