தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியதற்கு பிறகு, விஜய் தனது முதல் மரியாதையை பெரியாருக்கு செலுத்தியுள்ளார்.
விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்குவதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இதனையடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாளுக்கும், பிற விழாக்களுக்கும் வாழ்த்துக்களை மட்டுமே தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பெரியார் திடலில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தனது அரசியல் கட்சி அறிவிப்புக்கு பிறகு, விஜய் பொதுவெளியில் வந்து மரியாதை செலுத்துவது இதுவே முதல் முறை.