மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை: நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது

ஆப்ரிக்க நாடுகள் உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி விளையாட்டு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டன .இந்திய மகளிர் அணி லீக் சுற்றிலியே வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த தொடரில், லீக் சுற்றின் முடிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய 4 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறின. முதல் அரை இறுதி ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அதேவேளை, 2-வது அரை இறுதி ஆட்டத்தில், நியூஸிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகளை தோற்கடித்தது. சாம்பியன் கோப்பை யாருக்கு என தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறவுள்ளது. இதில் நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.இரு அணிகளும் இதுவரை டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது . நியூஸிலாந்து அணி 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து, சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்புகளை இழந்தது. இதற்கிடையில், தென் ஆப்பிரிக்க அணி கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இரு நாட்டு அணியும் கோப்பை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இரு அணி ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *