டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா அதிவேக சதம் அடித்து அசத்தல்.

இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி விளையாட்டு

சையத் முஷ்டாக் அலி தொடரில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா அதிவேகமாக சதம் அடித்து புதிய சாதனை ஒன்றை உருவாக்கியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் அபிஷேக், 28 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதத்தை பதிவு செய்துள்ளார். மேகாலய அணிக்கு எதிரான போட்டியில், அவர் 11 சிக்ஸர்களுடன் 10 ஓவர்களில் 143 ரன்களை அடித்து தனது அணிக்கு வெற்றியை கொண்டு வந்தார். 3. முதலில் பேட்டிங் செய்த மேகாலய அணி 20 ஓவர்களில் 142/7 ரன்களை எடுத்தது. பின்னர், பஞ்சாப் அணி 9.3 ஓவர்களில் 144/3 ரன்களை அடித்து அசத்தலான வெற்றியை பெற்றது. அபிஷேக் சர்மா 29 பந்துகளில் 106 ரன்கள் குவித்துள்ளார், இதில் 11 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கியுள்ளன. இதற்கு முன்பு, சையத் முஷ்டாக் அலி கோப்பையில் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் உர்வில் பட்டேல் அதிவேகமாக சதம் அடித்த 2-வது இந்தியர் என்ற சாதனை பெற்றிருந்தார். தற்போது, இந்த சாதனையை அபிஷேக் சர்மா மீண்டும் சமன்செய்துள்ளார். குறைவான பந்துகளில் சதம் அடித்த இந்தியர்களில் அபிஷேக் சர்மா மற்றும் உர்வில் பட்டேல் இருவரும் 28 பந்துகளில் சதம் அடித்துள்ளனர், அதன்பின் ரிஷப் பந்த் 32 பந்துகளில், ரோஹித் சர்மா 35 பந்துகளில், மற்றும் உர்வில் பட்டேல் 36 பந்துகளில் சதம் அடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *