2025 ஐபிஎல் சீசனுக்கான சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகம்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.ன் 18-வது சீசன் இந்த ஆண்டு வரும் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நவம்பர் 24, 25-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இந்த ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளது. இந்த புதிய ஜெர்சியை சென்னை அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *