சிலி மற்றும் அர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்

இயற்கை பேரிடர் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தென் அமெரிக்கா நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் வானிலை

அர்ஜென்டினா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கொத்து கொத்தாக பாதுகாப்பான இடத்தை நோக்கி வெளியேறி வருகின்றனர்.
சிலி மற்றும் அர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரைகளில் 7.4 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று(மே.02) மாலை சுமார் 6.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கும் கேப் ஹார்ன் மற்றும் அண்டார்டிகாவிற்கு இடையில் 6 மைல் தூரத்திலும் 10 கிமீ ஆழத்திலும் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் சிலியின் தெற்கு முனையில் உள்ள மாகல்லன்ஸ் பகுதியின் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் மீட்புப் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர் சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
இது குறித்து ஹைட்ரோகிராஃபிக் மற்றும் ஓசியானோகிராஃபிக் சர்வீஸ் (SHOA) என்ற சிலியின் கடற்படை நிறுவனம், அண்டார்டிக்காவின் சில பகுதியிலும் சிலியின் தெற்கு கடற்கரை பகுதியிலும் சுனாமி அலைகள் கரையை கடக்கும் என கனித்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் கொத்து கொத்தாக பாதுகாப்பான பகுதியை நோக்கி வெளிவேற்றப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *