ஐக்கிய நாடுகள் அவையின் தலைவராக உள்ள மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனின் முன்னாள் பிரதமர் பிலமோன் யாங்கின் பதவிக்காலம் வரும் செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ளது. போட்டியின்றி, ஒவ்வொரு நாடுகளும் சுழற்சி முறையில் ஐநா தலைவரை நியமித்து வந்துள்ளன. இந்நிலையில், இந்த முறை ஜேர்மனியின் வாய்ப்பு என்பதால், ஜேர்மனியின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஆனலேனா பேர்போக்கை ஜேர்மனி பரிந்துரைத்தது. ஆனால் ஜேர்மனியின் இந்த பரிந்துரையை எதிர்த்த ரஷ்யா ரகசிய வாக்கெடுப்பிற்கு கோரிக்கை வைத்தது. இதன்படி, நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில், மொத்தமாக 183 நாடுகளில், பேர்பாக்கிற்கு ஆதரவாக 167 நாடுகளும், ஷ்மிட்டுக்கு ஆதரவாக 7 நாடுகளும் வாக்களித்தன. 14 நாடுகள் யாருக்கும் வாக்களிக்கவில்லை.வெற்றிக்கு தேவையான 88 வாக்குகளை பெற்றுள்ள பேர்போக், செப்டம்பர் மாதம் ஐநாவின் 80வது தலைவராக பொறுப்பேற்க உள்ளார். ஐநா தலைவரின் பதவிக்காலம் ஒரு ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

