அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்பின் நெருக்கமான நண்பராக உள்ள மஸ்க், உலகின் மிகச் சிறந்த பணகாரரும் ஆவார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு, மஸ்க் சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் நியமிக்கப்பட்டார், இதன் மூலம் அரசின் செலவுகளை குறைப்பது மற்றும் நிறுவனங்களை சீரமைப்பது போன்ற முக்கிய பணிகள் அவருக்கு ஒப்படைக்கப்பட்டன. மஸ்க் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, இதுவரை ரூ.10 லட்சம் கோடியை மிச்சப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மஸ்க் இந்த பதவியில் 130 நாட்கள் மட்டுமே பணியாற்ற மஸ்க் ஒப்புகொண்டதாகவும் மேலும் அவரது பதவிக்காலம் மே மாத இறுதியில் முடிவடைகிறது. ஆனால், அதற்கு முன்பே அவர் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது நிறுவனத்தின் செயல்களில் முழுமையாக கவனம் செலுத்துவதற்காக அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

