கொலம்பியாவில் களைகட்டிய தக்காளி திருவிழா.

உலகம் கலை / கலாச்சாரம் சிறப்பு செய்திகள் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள்

கொலம்பியாவில் களைகட்டிய தக்காளி திருவிழா. கொலம்பியாவில் நடைபெற்ற தக்காளி திருவிழாவில் ஒருவர் மீது ஒருவர் தக்காளிகளை வீசி உற்சாகத்துடன் விளையாடி விழாவை கொண்டாடினர். கொலம்பியாவின் பொயாகா BOYACA பகுதியில் தக்காளி சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக நடந்த இத்திருவிழாவில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். டிரக்கில் கொண்டு வரப்பட்ட தக்காளிகளை நசுக்கிப் பிழிந்து ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்தனர். ஸ்பெயினில் மிக பிரம்மாண்டமாக தக்காளி திருவிழா கொண்டாடப்படும் நிலையில், கொலம்பியாவிலும் இதுபோன்ற விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *