பெங்களூரு நகரில் சோகத்தில் முடிந்த ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டம்; கூட்ட நெரிசலில் சிக்கி 11பேர் பலி

இந்தியா ஐபிஎல் தொடர் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி விபத்துகள் விளையாட்டு

ஆர்சிபி வெற்றிப் பேரணிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதிக நெரிசல் ஏற்பட்டிருப்பதால், பேரணி நடைபெறும் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனப் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாகக் கோப்பையை வென்று, அதன் ரசிகர்களை உற்சாக உணர்வில் ஆழ்த்தியுள்ளது. இதனை அடுத்து, வெற்றியைக் கொண்டாடுவதற்காகப் பேரணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதில் மிக அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என்பதால், நெரிசல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு அருகே ஆர்சிபி அணியின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
குறிப்பாக, மைதானத்தின் வாசல் அருகே ஏராளமானோர் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது. இதில் 20 பேருக்கும் அதிகமானவருக்குக் காயம் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் தெரிவிக்கின்றன.
சின்னசாமி மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், அங்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
வெற்றியைக் கொண்டாடுவதற்கு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சி சோகத்தில் முடிந்திருப்பது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *