மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்குவதற்கான முன்னோட்ட கணக்கெடுப்பு வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வரும் 2027ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் 2 கட்டங்களாக நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. லடாக், ஜம்மு- காஷ்மீர், ஹிமாச்சல், உத்தரகாண்ட் ஆகிய பனிப்பொழிவு பகுதிகளில் மட்டும் 2026ம் ஆண்டு அக்.1ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான தலைமை பதிவாளர் மற்றும் ஆணையர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாடு முழுவதும் முன்னோட்ட கணக்கெடுப்பு நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இந்த பணிக்காக மொபைல் செயலி பயன்படுத்தப்படும் என்றும், அனைத்து பணிகளை கண்காணித்து நிர்வகிக்க பிரத்யேக இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

