இந்தியா-அமெரிக்கா இடையே நாளை நடைபெறுகிறது இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை.

அமெரிக்கா அரசியல் இந்திய வணிகம் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் பொருளாதாரம் முதன்மை செய்தி

இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்கா 50% வரி விதித்த பிறகு முதல்முறையாக வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஏற்கனவே ஆக.25ல் நடக்க இருந்த வர்த்தக பேச்சு, அமெரிக்கா 50% வரி விதித்ததால் ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வர்த்தகத் துறை அதிகாரிகள் நாளை டெல்லி வர உள்ளனர். ஒன்றிய வர்த்தக அமைச்சக சிறப்புச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *