இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு 2024 ஆண்டிற்கான PEN Pinter Prize விருது அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு PEN Pinter Prize 2024 விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய எழுத்தாளர்களில் முதல் புக்கர் பரிசு வென்றவர். இன்றளவும் இவரின் ‘காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ விறுவிறுப்பான விற்பனையில் உள்ளது. இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுக்களான மாவோயிஸ்ட்களை சத்தீஸ்கரில் உள்ள பஸ்தர் காடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களது அரசியல், வாழ்வு மற்றும் நகர்வுகள் குறித்த “தோழர்களுடன் ஒரு பயணம்” எனும் பெயரில் புத்தகமாக எழுதி அவர் ஆவணப்படுத்தியுள்ளார்.
அதேபோல நொறுங்கிய குடியரசு எனும் பெயரில் அவர் எழுதிய புத்தகம் காஷ்மீரின் அரசியல் குறித்து விரிவாக பேசுகிறது. மேலும் பெருமகிழ்வின் பேரவை மற்றும் ஆசாதி உள்ளிட்ட புத்தகங்கள் இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவில் வாசகர்களால் கவனம் பெற்ற புத்தகங்கள் ஆகும்.
இந்த நிலையில் அருந்ததி ராய்க்கு PEN Pinter Prize 2024 விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு நோபல் பரிசு பெற்ற நாடக ஆசிரியர் ஹரோல்ட் பின்டரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 10 ஆம் தேதி பிரிட்டிஷ் லைப்ரரி இணைந்து நடத்தும் இந்த விழாவில் அருந்ததி ராய் விருதைப் பெற்றுக் கொண்டு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெண் பிண்டர் விருதின் ஜூரிக்களில் ஒருவரான ருத் போர்த்விக் தெரிவித்ததாவது.
“ 2024 ஆம் ஆண்டிற்கான PEN பின்டர் பரிசை வென்ற அருந்ததி ராய்க்கு எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அருந்ததி ராய் முக்கியமான கதைகளை புத்திசாலித்தனம் மற்றும் அழகுடன் கூறக் கூடிய எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலில் அவரது சக்தி வாய்ந்த குரல் அமைதியாக இருக்கக்கூடாது,’ என்று போர்த்விக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *