வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

அரசியல் உலகம் சிறப்பு செய்திகள் தேர்தல் செய்திகள் 2024 முதன்மை செய்தி

வங்கதேசத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் போது ஏற்பட்ட வன்முறையில் பலர் உயிரிழந்த நிலையில், அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவரின் ராஜினாமைக்குப் பிறகு, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். மேலும், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடைசெய்யப்பட்டுள்ளதால், தற்போது இடைக்கால அரசு தேர்தல் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சியும், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியும் முக்கிய போட்டியாளர்களாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *