நியூயார்க் தமிழ்ச் சங்கம் நடத்திய சித்திரை விழா கடந்த வாரம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேரவை விழாக் குழுவினரும் கலந்து கொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர். அப்போது, பேரவையின் 39-ஆவது தமிழ் விழாவிற்கு அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த விழாவில், நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் நிறுவர்களில் ஒருவரான மருத்துவர் எம்.என். கிருஷ்ணன் கலந்து கொண்டார். மேலும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முன்னாள் தலைவர்களான திரு. கால்டுவெல் வேள்நம்பி மற்றும் முனைவர் பாலா சுவாமிநாதன் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
அதேபோல், வாழ்நாள் உறுப்பினரான முனைவர் அருள் வீரப்பன் உள்ளிட்ட நியூயார்க் தமிழ்ச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் புரவலர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
— தகவல் தொடர்புக் குழு,வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.

