லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மெர் கடாபியின் மகன் துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை

அரசியல் ஆப்ரிக்க நாடுகள் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மறைவு/இரங்கல் மற்றவை முதன்மை செய்தி

லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மெர் கடாபியின் மகன் துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு லிபியா. இந்நாட்டை அதிபராக சுமார் 40 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர் மும்மெர் கடாபி. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடாபின் மகனான சைஃப் அல் இஸ்லாம் கடாஃபி, வடமேற்கு லிபியாவின் ஜின்டான் நகரில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் லிபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடாபியின் மறைவிற்கு பின் கைது செய்யப்பட்ட சைஃப் அல் இஸ்லாம் , கடந்த 2017 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளிவந்த அவர் தேர்தலில் போட்டியிட இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *