மலேசியாவில் மோடி; பாதுகாப்பு, பொருளாதார துறைகளில் இருநாடுகள் இணைந்து செயல்பட இலக்கு

அரசியல் இந்திய வணிகம் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பொருளாதாரம் மலேசியா மற்றவை முதன்மை செய்தி

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று மலேசியா சென்றுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதுதொடர்பாக பிரதமர் மோடி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “எனது நண்பரும் மலேசியப் பிரதமருமான அன்வர் இப்ராஹிமின் அழைப்பின்பேரில் மலேசியா செல்கிறேன். அன்வர் இப்ராகிமுடனான பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகளுக்கிடையே ஏற்பட போகும் வலுவான உறவை எதிர்பார்த்துள்ளேன். இந்தப் பயணம் நமது விரிவான மூலோபாய கூட்டாண்மையை அதிகரிக்கும் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும். மலேசியா துடிப்பான இந்திய புலம்பெயர்ந்தோரின் தாயகமாகும்.
நமது பாதுகாப்பு மற்றும் தற்காப்பு உறவுகளை ஆளப்படுத்துவதற்கும், பொருளாதார மற்றும் புத்தாக்க கூட்டுறவை மேம்படுத்துவதற்கும், ஒத்துழைப்பை புதிய துறைகளுக்கு விரிவுபடுத்துவதற்கும் நாங்கள் இலக்கு நிர்ணயத்து இருக்கிறோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *