ஏ.ஐ. மூலம் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லாது! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் நீதி மன்றம் முதன்மை செய்தி

உச்ச நீதிமன்றம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்துள்ளது.
திவால் தொடர்பான வழக்கில் தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT) வழங்கிய தீர்ப்பில், ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்தது.
மேலும், நீதித்துறையில் ஏஐ தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தேவையான வழிகாட்டுதல்களை உருவாக்க இந்திய பார் கவுன்சில் ஒரு சிறப்பு குழுவை அமைக்கவும், அந்த குழு விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு, நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கான தெளிவான விதிமுறைகள் அவசியம் என்பதை வலியுறுத்துவதாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *