தமிழ் நாட்டின் 13வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் அவருக்கு மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து 9 பேர் கொண்ட அமைச்சர்களும் பதவியேற்றனர்.
தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழ் நாடு சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் தமிழ் நாடு சட்டமன்றம் நாளை காலை 9 : 30 மணிக்கு கூடுகிறது. இக்கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். தொடர்ந்து நாளை மறுதினம் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது.

