சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு – உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சிறப்பு சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக உதகை 19வது ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கோடை சீசன் துவங்கிய நிலையில் தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், முக்கிய கோடை விழாக்களான உலக
புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சியும், உதகை
நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 19ஆவது ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ்
பூங்காவில் 64வது பழ கண்காட்சியும் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம்
அறிவித்திருந்தது.
நீலகிரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வந்த நிலையிலும், மழையில் நனைந்தபடி வண்ண, வண்ண குடைகளில், வண்ண, வண்ண ரோஜா மலர்களை கண்டு ரசித்து சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் இன்றுடன் 19வது ரோஜா கண்காட்சி நிறைவடைய இருந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததன் காரணமாக மேலும் 3 நாட்களுக்கு கண்காட்சியை பூங்கா நிர்வாகம் நீட்டித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *