நார்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்: வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!

சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி விளையாட்டு

இந்தியாவின் நட்சத்திர கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, நார்வே செஸ் 2025 தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம், நார்வே செஸ் பட்டத்தை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற 14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஒவ்வொரு வீரரும் மற்ற போட்டியாளர்களை தலா இரண்டு முறை எதிர்கொண்டனர். 9-வது சுற்று முடிவில் 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்த பிரக்ஞானந்தா, இறுதிச் சுற்றில் ஜெர்மனியைச் சேர்ந்த வின்சென்ட் கெய்மரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி இந்திய செஸ் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *