சென்னை ஐஐடி அறக்கட்டளை, அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து மின்னணு வர்த்தக (இ-காமர்ஸ்) தொழில்நுட்ப பயிற்சியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த தொடர்பில், சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சர்வதேச அளவில் இ-காமர்ஸ் வர்த்தகம் அடுத்த 3 ஆண்டுகளில் 7.97 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் வரை உயர்வதற்கான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த துறையில் வருடாந்திர வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர், இதனால் பயிற்சி பெற்ற இ-காமர்ஸ் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான (கிளவுட் டெவலப்பர்ஸ்) தேவையும் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு, சென்னை ஐஐடி பிரவர்தக் டெக்னாலஜீஸ் அறக்கட்டளை, கோடனேட்டிவ்ஸ் என்ற அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இ-காமர்ஸ் டெவலப்பர் பயிற்சியை (Salesforce B2C Commerce Cloud Training) வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த பயிற்சி 70 மணி நேர ஆன்லைன் வகுப்புகள் மற்றும் 130 மணி நேர நேரடி செயல்முறை பயிற்சிகளை உள்ளடக்கியது. இதில் பங்கேற்க விரும்பும் நபர்கள், இன்று நவம்பர் 22-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க https://digitalskills.iitmpravartak.org.in என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம் .

