நடிகர் மாதவனுக்கு கலைத்துறையில் சாதனைக்காக இன்று பத்மஸ்ரீ விருதினை குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவித்தார்

ஆளுமை/விருது இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தமிழ்நாடு நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி

இந்தியத் திரையுலகில் தனது வசீகரமான நடிப்பால் ‘சாக்லேட் பாய்’ ஆக அறிமுகமாகி, இன்று தேசிய விருது பெற்ற இயக்குனராக உயர்ந்திருக்கும் நடிகர் மாதவனுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கி கௌரவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் மாதவன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்த இவரை, முன்னணி இயக்குனரான மணிரத்னம் தனது ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வந்த மாதவன், தொடர்ந்து மின்னலே, ரன், ஆயுத எழுத்து எனப் பல ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் டாப் நடிகராக மாறினார்.
தமிழைத் தொடர்ந்து இந்தி திரையுலகில் கால் பதித்த மாதவன், நடிகராக மட்டுமில்லாமல், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான ‘ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் மாறினார். மாதவனின் கடின உழைப்பால் இந்தப் படம், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *