லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ : 10,000 ஹெக்டர் நிலம் பாதிப்பு, 5 பேர் உயிரிழந்தனர்.

இயற்கை பேரிடர் இயற்க்கை உலகம் சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள் விபத்துகள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த தீயால் சுமார் 10,000 ஹெக்டர் நிலம் கருகி நாசமாகி விட்டது, மேலும் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவத் தொடங்கியது. பலத்த காற்றின் காரணமாக, இந்த காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கு விரைவாக பரவ தொடங்கியது. தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தீயை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளை தாக்கயது. வீடுகள் மற்றும் பிற கட்டிடங்கள் தீக்கிரையாகி வரும் நிலையில் காட்டுத்தீ காரணமாக சுமார் 1 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காட்டுத்தீயால் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *