புதுடில்லியில் பிரதமர் வீட்டின் முன் போராட்டம்; ராகுல்காந்தி கைது

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் போராட்டம்/ கலவரம் மற்றவை முதன்மை செய்தி

டில்லியில் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி , பிரியங்கா காந்தி, உள்ளிட்டோர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிக்கு பொறுபேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி கட்சியினர் நேற்று நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது பேரணி சென்ற மாணவர்கள் மீது துணை ராணுவத்தினர் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பலரும் காயமடைந்தனர். இந்த நிலையில் இன்று மக்களைவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லி பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக சென்று சிஜேபி இளைஞர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் கலந்து கொண்டார். இந்த நிலையில் போராடிய காங்கிரஸ் கட்சி எம்.பிக்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *