கால்பந்து உலகக் கோப்பை பைனலில் ஸ்பெயின் வெல்ல கோல் அடித்தவர்; பெர்ரான் டோரஸ்

உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

உலக கோப்பை இறுதி போட்டியில் தனது ஒரே கோல் மூலம் ஸ்பெயின் அணிக்கு உலக கோப்பை பெற்று தந்துள்ளார் முன்கள வீரர் பெர்ரான் டோரஸ். 26 வயதான இவர் மக்கள் கொண்டாடும் நாயகனாக உருவெடுத்துள்ளார். இம்முறை 8 போட்டியில் பங்கேற்ற டோரஸ், ஒரு கோல், ஒரு அசிஸ்ட்’ செய்துள்ளார். அவர் கூறுகையில், ``உண்மையாக நான் கோல் அடித்ததை நம்ப முடியவில்லை. என்னை நோக்கி, பந்து வந்ததை பார்த்தேன். ஸ்பெயின் மக்கள் துணையுடன்பவர்புல்’ ஷாட் அடித்தேன். அது கோலாக மாறியது. ஸ்பெயினின் சுமார் 4.7 கோடி மக்கள் அடித்த கோலாக கருதுகிறேன். பைனலில் எங்களுக்கு தான் வெற்றி என விதி ஏற்கனவே எழுதியிருக்கிறது. இதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.
பெர்ரான் டோரசின் வெற்றிப் பயணம் இந்திய மண்ணில் இருந்து துவங்கியது. அசாமின் கவுகாத்தியில் 2017ல் ‘பிபா’ 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை ரவுண்ட்-16’ மோதல் நடந்தது. இதில் ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் மோதின. ஸ்பெயின் துவக்கலெவனில்’ 17 வயது இளம் வீரராக டோரஸ் இடம் பெற்றிருந்தார். பிரான்ஸ் அணிக்கு லென்னி பின்டர் முதல் கோல் அடித்தார். பின் டோரஸ் அசிஸ்ட்’ செய்ய, ஜுவான் மிராண்டா ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து கேப்டன் ஏபெல் ருயிஸ் ஒரு கோல் அடிக்க, ஸ்பெயின் அணி 2-1 என வென்று, காலிறுதிக்கு முன்னேறியது. இப்போட்டியில் டோரஸ் கோல் அடிக்காத போதும், இவரதுஅசிஸ்ட்’ வெற்றிக்கு உதவியது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் அருமையான கோல் மூலம் ஸ்பெயின் அணியின் உலக கோப்பை கனவை டோரஸ் நனவாக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *