வனங்கள் பெருக காட்டுராஜா அவசியம் – யாரந்த ராஜா.?

இந்தியா உலகம் தமிழ்நாடு முதன்மை செய்தி வனவிலங்குகள்

மனிதன் வனங்களோடு ஒன்றி வாழும் வாழ்க்கை முறையையே வாழ்ந்து வருகிறான். அவ்வாறு வனங்கள் பெருக வனவிலங்குகள் மிக மிக அவசியம். பலத்தில் மிகச் சிறந்த புலி, சிங்கம்,  சிறுத்தை என அறியப்பட்டாலும் இவைகளுக்கெல்லாம் ஓர் காட்டுராஜா உண்டு. யாரவர்.?? ஆம் யானை தான் காடுகளுக்கெல்லாம் ராஜா. அப்படியழைக்க காரணம் என்ன.??
ஆஜானுபாகுவான தோற்றம், டன் கணக்கில் எடை கொண்ட பெரிய உருவம், இரண்டு தந்தங்கள், பெரிய தும்பிக்கையென அந்த வசீகரத் தோற்றம் கொண்ட யானை வனங்களில் இருக்க வேண்டியது அவசியம். யானை சாதாரணமாக 60 கி.மீ பயணிக்கும் ஒரு நாளில். யானை உட்கொள்ளும் உணவின் அளவு கிட்டத்தட்ட 140 முதல் 240 கிலோ வரை. ஒரு நாளைக்கு 250 – 300 லிட்டர் வரை நீர் அறுந்தும். யானை இலையுண்ணும் பாலூட்டி வகையைச் சார்ந்தது. இவ்வாறு இலைதலைகளை உண்டு நீண்ட தூரம் நடப்பதால் யானை இடும் சாணங்களில் எஞ்சியிருக்கும் விதைகளானது வனங்கள் முழுவதுமாக பரவும். யானை சாணத்தில் உள்ள ஈரப்பதம் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும். அதனால் சாணத்தில் எஞ்சியிருக்கும் விதைகள் முளைக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதேப் போல யானையின் வழித்தடங்கள் மிக மிக அவசியம். அவ்வழித்தடங்களே பிற வனவிலங்குகளுக்கும் பாதை அமைத்துத் தரும். யானைகளே நிலத்தின் ஈரப்பதத்தை அறிந்து தண்ணீரை கண்டுபிடிக்கும். இவ்வாறு புது வனங்கள் தோன்றவே யானைகள் காரணமாக இருக்கின்றன.
இப்படியிருக்க யானைகள் பாதுகாப்பு ஏன் மிக இன்றியமையாத ஒன்றாக பார்க்கபபப்படுகிறது தற்போது.? சட்டவிரோதமாக வனங்களின் அறியவகை மரங்கள் வெட்டப்படுகின்றன. அதே சமயம் யானைகளும் அதன் தந்தங்களுக்காக கொல்லப்படுகின்றன. ஆக்கிரமித்தல் காரணமாக யானையின் வழித்தடங்களும் அழிக்கப்படுகின்றன. உலகில் மிக அறிய யானை வகைகளில் ஒன்று ஆப்பிரிக்க இன யானைகள். 13 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த யானைகளின் எண்ணிக்கை 7 லட்சமாக குறைந்துவிட்டது. இந்தியாவிலும் 2017 கணக்கெடுப்புப் படி 24 ஆயிரம் யானைகள் இருந்தன. ஆண்டுதோறும் கொல்லப்படும் யானைகள், வனப்பகுதிகளில் ரயில்கள் மோதி இறக்கும் யானைகளென கிட்டத்தட்ட 400 யானைகள் அழிந்துவிட்டது 2017-2019 காலக்கட்டம் வரை.
வனங்கள் எவ்வளவு முக்கியமோ வனங்கள் உயிர்ப்போடு இருக்க, மேலும் பெருக யானைகள் இருக்க வேண்டியது கட்டாயம்.

Leave a Reply

Your email address will not be published.