100 கோடி வசூல்: நடிகர் சூரியாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் அசத்தல்

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தமிழ்நாடு நிகழ்வுகள் பெண்கள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி

கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியானது.  இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராதிகா, ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்தாரா எண்டர்டெய்ன்மன்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்று வசூலை குவித்து வந்தது. இத்திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம், சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகக் குறுகிய காலத்தில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிய முதல் திரைப்படம் என்ற பெருமையை ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *