கைலாசா நாட்டின் முகவரியை முறைப்படி அறிவித்தார் நித்யானந்தா

ஆப்ரிக்க நாடுகள் ஆன்மீகம் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

கைலாசா என்ற தனி தேசம் கண்டுவிட்டதாக அறிவித்த சாமியார் நித்தியானந்தா பல ஆண்டுகள் கழித்து அதன் முகவரியை அறிவித்துள்ளார்.
ஆட்கடத்தல், கொள்ளை, ஏமாற்றுதல், கற்பழிப்பு என்று பல வழக்குகளில் சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா. பெண் சீடர்கள் மட்டும் இல்லாமல் சில ஆண் சீடர்களும் சாமியார் நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டும், மோசடி குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர்.
இந்தியாவில் பல வழக்குகளில் சிக்கியவர் இனியும் இந்தியாவில் இருந்தால் சிறை வாழ்வே நிரந்தரம் ஆகிவிடும் என்று, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தனது சில சீடர்களுடன் தலைமறைவானார். ஆனாலும் அடங்காத நித்தியானந்தா எங்கோ பதுங்கியிருந்து கிராஃபிக்ஸ் லீலைகளை செய்து தகதகவென பேக்ரவுண்ட் செட்டப்புகளை, செட்டிங்குகளை செய்து யூடியூப் நேரலைகளை பேசிவந்தார்.
கைலாசா நாட்டின் அதிபராக தான் இருப்பதாக கூறியவர் நிர்வாக ரீதியாக நாட்டிற்கான அமைச்சர்கள் பெயர்களையும் அறிவித்தார். இதற்கு ஒருபடி மேலே சென்று கைலாசா நாட்டிற்காக தனி வங்கி, தனி காசு என்று விடாத அறிவிப்புகளே இல்லை. ஆனால் அந்த நாடு எங்கு உள்ளது, எப்படி உள்ளது என்ற எந்த தகவலையும் இதுவரை பொதுவெளியில் கூறியதே இல்லை.
இந்த நிலையில் தான் பல ஆண்டுகள் கழித்து தனது கைலாசாவின் முகவரியை முதன்முறையாக நித்தியானந்தா அறிவித்திருக்கிறார். அதன்படி, மேற்கு ஆப்பிரிக்கா அருகே அட்லாண்டிக் பெருங்கடலோரம் கினியா பிசாவ்வில் அமைந்துள்ளதாக வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *