போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் சுற்றுலா வருகை குறைந்துள்ள நிலையில், துபாய் மற்றும் அபுதாபி போன்ற நகரங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் பெரிய அளவில் சலுகைகளை அறிவித்துள்ளன. வெளிநாட்டு பயணிகள் வருகை குறைந்ததால், ஹோட்டல் முன்பதிவுகள் சரிவடைந்துள்ளன. இதனால் வாடிக்கையாளர்களை மீண்டும் ஈர்க்கும் நோக்கில், சில ஓட்டல்கள் 70% வரை தள்ளுபடி வழங்குகின்றன. துபாயில் உள்ள பிரபலமான “ஃபோர் சீசன்ஸ்” ஓட்டல் கூட, ஒரு நாள் தங்கும் கட்டணத்தில் இந்திய ரூபாயில் சுமார் ₹16,000 வரை சலுகை வழங்கியுள்ளது.மேலும், சுற்றுலா துறையை மீண்டும் உயிர்ப்பிக்க பல ஓட்டல்கள் சிறப்பு பேக்கேஜ்கள், குடும்ப தள்ளுபடிகள், இலவச உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளையும் அறிவித்து வருகின்றன. விமான சேவைகளும் சில வழித்தடங்களில் குறைந்த கட்டணங்களை வழங்க ஆரம்பித்துள்ளன. இதனால் குறைந்த செலவில் வெளிநாடு சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், பயணிகள் பாதுகாப்பு நிலை மற்றும் அரசின் வழிகாட்டுதல்களை கவனத்தில் கொண்டு பயணம் திட்டமிட வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

