நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது! தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்த சீமான்.

அரசியல் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள்

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் தொகுதி வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவருடன் இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் ரோடு ஷோவுக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகக் கூறி 9 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட 9 பேரும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். இந்தக் கைதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *