ஆபத்தான நிலையில் 5583 பள்ளிக் கட்டிடங்கள் – தமிழக அரசு அதிர்ச்சித் தகவல்

செய்திகள் தமிழ்க்கல்வி தமிழ்நாடு

மதுரை: தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் செந்தில் முருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது.  அப்போது தமிழக அரசு சார்பில், “2021-2022 ஆண்டும் தமிழகத்தில் 2,553 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளது. 2022-2023 ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு 3030 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் அகற்றப்பட உள்ளது.

ரூ.3,745.28 கோடி செலவில் 6,941 பள்ளிகளுக்கு 40,043 வகுப்பறைகள், 3,146 அறிவியல் ஆய்வகங்கள், 10,470 கழிப்பறைகள், 5,421 குடிநீர் வசதிகள், 8,28,387 மீட்டர் சுற்றுச் சுவர் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளது. ரூ.106.78 கோடி செலவில் 2,695 பள்ளிகளில் 32 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 436 கழிவறைகள், 2,270 பள்ளிகளுக்கு குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட குழு அமைக்க கோரிய வழக்கை முடித்து வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.