ரஜினிகாந்த ஜெயிலர் மலேசியாவில் வெளியான இந்திய படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது

இசை இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மலேசியா மற்றவை முதன்மை செய்தி

ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மலேசியாவில் எந்தவொரு இந்திய படமும் செய்யாத வசூலை செய்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
அவருடன் மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவக்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரோப், ரம்யா கிருஷ்ணன், rajiniவிநாயகன், மிர்ணா உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்த திரைப்படம் உலக அளவில் ரூ. 630 கோடி வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. இந்த படம் தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் உலகில் பல நாடுகளில் ஜெயிலர் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மலேசியாவில் அதிகம் வசூலித்த இந்திய படங்களின் பட்டியலில் ஜெயிலர் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்த தகவலை மலேசியாவில் ஜெயிலர் படத்தை வெளியிட்ட ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. சாதனை மேல் சாதனை படைத்து வரும் ஜெயிலர் படத்திற்கு மலேசியா வசூல் மற்றொரு உச்சத்தை கொடுத்தள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *