மு.க. ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா, திமுக சார்பில் சென்னையில் பொதுக் கூட்டம் – முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள்

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி இன்று சென்னையில் திமுக சார்பில் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான பொதுக்கூட்டத்தில் பிற அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி சென்னை நந்தனத்தில் இன்று மாலை ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்பட பிற அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த பல்வேறு தலைவர்கள் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் அமைய வேண்டும் என திட்டமிட்டு சென்னை நந்தனத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *