சமூக மற்றும் சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் தவெக முழு உறுதியுடன் செயல்படும்; இதில் எந்த சமரசமும் இல்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் அவர் பேசினார். தமிழ்நாடு அன்பும் கருணையும் நிறைந்த மண் என்றும், பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற அனைத்து பண்டிகைகளும் அனைவராலும் ஒன்றாகக் கொண்டாடப்படுகின்றன என்றும் கூறினார். வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறுபட்டாலும் அனைவரும் சகோதரர்களே என்றார்.உண்மையான கடவுள் நம்பிக்கை நல்லிணக்கத்தை வளர்க்கும் என்றும், பிறரின் நம்பிக்கையை மதிக்க கற்றுத் தரும் என்றும் விஜய் தெரிவித்தார். சமூக நீதியும் மதச்சார்பற்ற தன்மையும் தவெகின் அடிப்படை கொள்கைகள் என அவர் கூறினார்.“ஒரு ஒளி கண்டிப்பாக பிறக்கும்; அந்த ஒளி நம்மை வழிநடத்தும்” என நம்பிக்கை தெரிவித்து, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.

