கடந்த ஆண்டு வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசைக் கவிழ்த்த மாணவர் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இளைஞர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி, சமீபத்தில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 18 மற்றும் 19 தேதிகளில் பல இடங்களில் கடும் வன்முறை வெடித்தது.இந்த வன்முறைகளில், ஒரு இந்து இளைஞர் கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சட்டோகிராமில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரியின் இல்லத்தின் மீது கல்வீச்சு தாக்குதலும் நடைபெற்றது.இந்நிலையில், வங்கதேசத்தில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுவதால், சிட்டகாங்கில் உள்ள இந்திய விசா விண்ணப்ப சேவைகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், நாட்டின் மற்ற நான்கு விசா மையங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே, சில்ஹெட் நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

