இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தனது இன்ஸ்டாகிராமில் நேற்று தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதோடு ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தமிழ் நினைவு சின்னம் ஒன்றின் மாதிரி வடிவமைப்பு உள்ளது. நீயே ஒளி என நுழைவு வாயில் மேல்பக்கம் எழுதபட்டுள்ளது. அதனை சுற்றி தமிழ் வாசகங்கள் உள்ளது.இதனை குறிப்பிட்டு , ஏ.ஆர்.ரகுமான் தமிழுக்கு நினைவுச்சின்னம் எழுப்பும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் மற்றும் பல புதிய வடிவங்களில் தமிழ் பெருமைகளை உலகமுழுவதும் அறிய அவர் பல முயற்சிகள் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு உலகம் முழுவதும் மொழிகளை கடந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழின் மீது மிகுந்த அன்பு கொண்டவர், அதனை பல்வேறு மேடைகளில் நாம் காணலாம். முதன்முறையாக இரண்டு ஆஸ்கர்களை வென்ற போது, ஆஸ்கர் விழா மேடையில் “எல்லா புகழும் இறைவனுக்கே” என தமிழில் கூறியது குறிப்பிடத்தக்கது.
