அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் டியாகோ நகரில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவீட்டில் 5.2 என பதிவாகியுள்ளது, இதனால் அமெரிக்காவின் பல பகுதிகளில் நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்தனர். சான் டியாகோவிலிருந்து சுமார் 97 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜூலியன் பகுதி நிலநடுக்கத்தின் மையமாக இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மக்கள் குறைவாக வாழும் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சில பகுதிகளில் குறைந்த அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், கலிபோர்னியாவில் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
