தமிழகத்தில் தமிழ் மக்களின் மிக முக்கியமான நாட்களில் ஆடி 18ம் நாள் ஆடிப் பெருக்கு மிக முக்கியமானவை. ஆடி முதல் நாள், ஆடி அம்மாவாசை, ஆடி 18ம் நாள் என இம்மாதம் தமிழர்களுக்கு விழா மாதம் தான். குறிப்பாக ஆடிப் பெருக்கு பெரும் விமர்சியாக கொண்டாடப்படும் நாள் இன்று.
துள்ளி வரும் காவிரித் தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் காவிரி பாயும் தருமபுரி, சேலம், கரூர், தருச்சி, தஞ்சாவூர் என கடல் சேறும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்கள் அனைத்திலும் ஆடி பெருக்கு கொண்டாடப்படும். காவிரி கரையில் தேங்காய், வெல்லம், அரிசி, பழங்களென அனைத்தும் படையிலிட்டு வழிபட்டனர்.
ஆடிப் பெருக்கு நாள் இரண்டு மிக முக்கிய அம்சங்கள் நடைபெறும். ஒன்று திருவரங்க பெருமான் அரங்கநாதன் அங்குள்ள அம்மா மண்டபத்தில் பல்லக்கில் பவணி வந்து காவிரித் தாய்க்கு சீர் செய்வது வழக்கம். மற்றொன்று புது மணத்தம்பதிகள் திருமண நாளன்று தாங்கள் அணிந்திருந்த பூமாலையை காவிரி ஆற்றில் விடும் நிகழ்வும் நடைபெறும் மற்றும் வயதில் மூத்த தம்பதிகளிடம் ஆசி பெற்று ஆடிப் பெருக்கை கொண்டாடுவார்கள்.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக காவிரி கரையில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு மக்கள் கூட தடையேதுமில்லை. எனினும் இந்தாண்டு பருவமழை காரணமாக காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. அதனால் மக்கள் நதிக்கரையின் அருகில் செல்ல தடையுள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் அணை வந்து சேறும் மொத்த நீரும் ஆற்றில் விடப்படுகிறது. இதனால் இந்த வருடம் ஆடிப் பெருக்கன்று காவிரி கரைபுரண்டோடுகிறாள்.